சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள முருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி மனைவி விஜயலட்சுமி (60). இவர், நல்லறிக்கை கிராமத்தில் தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். போதிய மழையின்றி மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் காய்ந்தனவாம். இதனிடையே, கடந்த 31 ஆம் தேதி வயலுக்கு சென்ற விஜயலட்சுமி வயலிலேயே மயங்கி விழுந்தாராம். இதையறிந்த, அப்பகுதியை சேர்ந்த நபர்கள் விஜயலட்சுமியை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால், அங்கு சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.
    இவரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது மருமகன் பழனிவேல் (43), ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ச. மாரிமுத்துவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai