சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் முறை குறித்து, தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் சசிகலா நேரில் பார்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  பெரம்பலூர் மாவட்டத்திற்கு வியாழக்கிழமை வந்த தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் சசிகலா, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (மேற்கு) கல்வி கற்பிக்கும் முறை, மாணவர்களின் கல்வி தரம், ஆசிரியர்களின் பாட திட்டம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார்.
  தொடந்து, பள்ளியில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பாடத்திட்ட பயிற்சி நடைபெறுவதை பார்வையிட்டு பாடத்திட்டம் குறித்தும், அதை பின்பற்றி ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறை குறித்தும் கேட்டறிந்தார்.
  இதையடுத்து, வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் மாணவர்களின் கல்வித் திறன் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார். பின்னர், மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் முழு தேர்ச்சியடைய மேற்கொள்ள வேண்டிய ஆசிரியர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.   இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இரா. எலிசபெத், அனைவருக்கும் கல்வி உதவித் திட்ட அலுவலர் பாஸ்கர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai