சுடச்சுட

  

  பெரம்பலூரில் மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றோர் விவரம்

  By DIN  |   Published on : 07th January 2017 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,  கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், தடகளம், கையுந்துப்பந்து, மேஜைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகளும், சைக்கிள் ஓட்டுதல், கூடைப்பந்து, ஹாக்கி, வில்வித்தை, ஜுடோ ஆகிய தேர்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  இந்தப் போட்டிகளில் 14, 17 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளைச் சேர்ந்த 480 மாணவர்களும், 420 மாணவிகளும் என 900 பேர் கலந்து கொண்டனர்.
  இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா தொடக்கி வைத்தார்.
  இதில், தடகள போட்டியில் 14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான பிரிவில் 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், 100 மீ, 400 மீ ரிலே ஓட்டத்தில் ஒய். டெல்சி, குண்டு எறிதல் போட்டியில் பி. பிரியதர்ஷினி, 17 வயதுக்குள்பட்ட பிரிவில் 400 மீ ஓட்டத்தில் ஆர். கிருத்திகா, நீளம் தாண்டுதல் போட்டியில் ஆர். சங்கீதா, 100 மீ ஓட்டம், 400 மீ ரிலே போட்டிகளில் கே. பவானி, குண்டு எறிதல் போட்டியில் ஜி. ராஜாத்தி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
  14 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான பிரிவில் 400 மீ ஓட்டத்தில் ஆர். கோபிநாத், நீளம் தாண்டுதலில் த. தமிழ்செல்வன், குண்டு எறிதலில் த. அஜித்குமார், 100 மீ ஓட்டத்தில் சி.ஆர். மிதுன்ராஜ், 400 மீ ரிலேயில் எம். பாரத், 17 வயதுக்குள்பட்ட பிரிவில் 400 மீ ஓட்டத்தில் எஸ். விஜய், நீளம் தாண்டுதலில் ஜெ. டேவிட் குமார், குண்டு எறிதலில் ஆர்.ஜெ. ஹரிஸ், 100 மீ ஓட்டத்தில் சி.ஆர். விபின்ராஜ், 400 மீ ரிலேயில் எஸ். மருதுபாண்டி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
  14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கையுந்துப்பந்து போட்டியில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், 17 வயதுக்குள்பட்ட பிரிவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் முதலிடம் பெற்றனர்.
  14 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான கையுந்துப்பந்து போட்டியில் செங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும், 17 வயதுக்குள்பட்ட போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும், 14 வயதுக்குள்பட்ட மேஜைப்பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் அ. கதிரவன், இரட்டையர் பிரிவில் எம். பீர்முகம்மது, அசோக் ஆகியோரும் 17 வயதுக்குள்பட்டோருக்கான மேஜைப்பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஆர். பச்சைமுத்து, இரட்டையர் பிரிவில் ஆர். பச்சமுத்து, பி. அசோக் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
  14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்து தேர்வுப் போட்டியில் இ. ஐஸ்வர்யா, ஷாலினி சஞ்சனா, ஆண்களுக்கான பிரிவில் ஆர். ரிஷி, ஜெ. ஸ்ரீவந்த், 17 வயதிற்குள்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்து தேர்வுப் போட்டியில் டி. செளந்தர்யா, கே. மாம்சி, ஆண்களுக்கான பிரிவில் வி.எஸ். விபின், ஆர். சிபி ஆகியோர் தேர்வு பெற்றனர்.
  14 வயதிற்குள்பட்ட பெண்களுக்கான வில்வித்தை தேர்வுப் போட்டியில் ஆர். மலர்கொடி, எஸ். ஆயிஷாபீ, ஆண்கள் பிரிவில் என். மெய்யன், ஆர். ஆகாஷும், 17 வயதிற்குள்பட்ட பெண்கள் பிரிவில் எஸ். ஜனனி, பி. கெளசல்யா, ஆண்கள் பிரிவில் எஸ். நாகசரவணன், கே. தினேஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
  14 வயதிற்குள்பட்ட பெண்களுக்கான ஜுடோ தேர்வுப் போட்டியில் என். அப்சரா, அ. அன்புமொழி, 17 வயதிற்குள்பட்ட பிரிவில் ஆர். பிரியா, எம். ராஜகுமாரி, 14 வயதிற்குள்பட்ட ஆண்களுக்கான ஜுடோ தேர்வு போட்டியில் பி. ஹரிஸ், எஸ். விஜய் ஆகியோர் தேர்வு பெற்றனர். சனிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
  இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன், தடகளப் பயிற்றுநர் க. கோகிலா, டேக்வாண்டோ பயிற்றுநர் ந. தர்மராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai