சுடச்சுட

    

    மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: தந்தைக்கு ஓராண்டு சிறை

    By DIN  |   Published on : 07th January 2017 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 3 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    வேப்பந்தட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ மகன் சுதாகர் (35). விவசாயி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் அவரது 3 வயது மகளுக்கு சுதாகர் பாலியல் துன்புறுத்தல் அளித்தாராம்.
    இதையறிந்த அவரது மனைவி புஷ்பராணி (28), பெரம்பலூர் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து சுதாகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.  இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், சுதாகருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ, 1,000 அபராதமும், தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி விஜயகாந்த். இதையடுத்து, சுதாகர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai