Enable Javscript for better performance
"மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை'- Dinamani

சுடச்சுட

    

    "மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை'

    By DIN  |   Published on : 07th January 2017 06:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.
    பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் அரையாண்டுத் தேர்வு முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இந்தக் கூட்டத்தில், அரையாண்டுத் தேர்வில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்தும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியர் மேலும் பேசியது:  மாணவர்களின் தேர்ச்சி வீதம் குறைவதற்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றைக் களைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்தி, அவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளித்து தேர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்.
    மேலும், மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக, இந்த கல்வியாண்டு இறுதியில் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ள எஸ்.எஸ்.எல்.ஸி மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் முழுதேர்ச்சி பெறும் வகையில், அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் நிகழாண்டு 100% தேர்ச்சியை பெற ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்றார் ஆட்சியர் நந்தகுமார். கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க. முனுசாமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.   

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai