சுடச்சுட

  

  விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க கோரிக்கை

  By DIN  |   Published on : 07th January 2017 06:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியர் க. நந்தகுமாரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
  இதுகுறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் பி. ரமேஷ் தலைமையிலான நிர்வாகிகள், ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
  தற்போது மழையளவு குறைந்து விவசாயமும், விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தற்போது, வறட்சி குறித்து குழு அமைத்து தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.  எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் பணியை, 200 நாள்களாக உயர்த்தி ரூ. 400 கூலி வழங்க வேண்டும்.
  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக பணியை தொடங்க வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai