Enable Javscript for better performance
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 08th January 2017 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் இரா. முரளி அறிவுறுத்தியுள்ளார்.
    இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட குறைவான அளவு பெய்த காரணத்தால், தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலை உள்ளது.
    இதனால், பெரம்பலூர் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து விநியோகிக்கப்படும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குறைவாக பெறப்படுகிறது. எனவே, நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..
    மேலும், குடிநீர் இணைப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுபவர்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தகவல் அளிக்க...
    பெரம்பலூர் நகராட்சியில் மின்மோட்டார் வைத்து சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சுபவர்களின் விவரம், குடிநீர் கசிவு மற்றும் குடிநீர் தேவை ஆகிய விவரங்களுக்கு 225285 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai