சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் சனிக்கிழமை உயிரிழந்தது.
    பெரம்பலூர் அருகேயுள்ள எசனை காட்டு மாரியம்மன் கோயில் பகுதியில் புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. அப்போது, எசனை காட்டுமாரியம்மன் கோயில்
    அருகேயுள்ள பொது கிணற்றில் தவறி விழுந்து அந்த மான் உயிரிழந்தது.
    இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர்.
    இதன்பேரில், அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கிணற்றில் இறந்து கிடந்த மானை மீட்டனர்.
    மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர், வனத் துறையினர் உயிரிழந்த மானின் உடலை வனப் பகுதியில் புதைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai