சுடச்சுட

    

    மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஜன 6, 7 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசளிக்கப்பட்டது.
    கேலோ இந்தியா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 102 பள்ளிகளைச் சேர்ந்த 680 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
    பளு தூக்குதல் போட்டி: பவ்யா,கஸ்தூரி, டெல்சி, கார்குழலி, சங்கீதா,சீதா,அருள்மாரி ஆகியோர் அவரவர் பங்கேற்ற போட்டிகளில் முதலிடம் பெற்றனர். ஆண்களுக்கான போட்டி: ரமேஷ், அஜித்குமார்,அருண்குமார்,விஷ்வா, வெங்கடேசன், சூர்யா, யோகேஷ், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அவரவர் பங்கேற்ற போட்டிகளில் முதலிடம் பெற்றனர்.  டென்னிஸ் போட்டி: கோல்டன் கேட்ஸ் பள்ளி அணியினர் பங்கேற்ற போட்டிகளில் முதலிடம் பெற்றனர்.
    இறகுப்பந்து போட்டி: அருண், இரட்டையர் பிரிவில் லாலட் மற்றும் அருண்,  ஜிவன் ஹித்தேஸ், இரட்டையர் பிரிவில் ஜிவன் ஹித்தேஸ் மற்றும் கோகுல் மற்றும் குழு பிரிவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முஸ்ரத், கெளசிக், இரட்டையர் பிரிவில் முஸ்ரத் மற்றும் சுபிக்ஷா, குழு பிரிவில் ரோவர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவிகள் அணி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
    குத்துச்சண்டை போட்டி: தர்மராஜ்,அறிவேந்தன்,மதிவாணன், பெரியசாமி. பெண்கள் பிரிவில் கீர்த்தனா, ஸ்ரீநிதி,ரம்யா,தரணிதா,அபிராமி ஆகியோர் அவரவர் பங்கேற்ற போட்டிகளில் முதலிடம் பெற்றனர். கோ-கோ தேர்வு போட்டியில் பாபு, வினோத், ஸ்ரீநாத்,  அஜய், திவ்யபிரியா, மகேஸ்வா, மணிமேகலை, பெனினால். கைப்பந்து போட்டியில் சக்தி,துளசிநாதன்,ராம்குமார், விஷ்வா ஆகியோர் தேர்வு பெற்றனர். பெண்களுக்கான கால்பந்து தேர்வு போட்டியில் சங்கீதா,  மலர்கொடி,தர்ஷினி,கெளசல்யா மற்றும் கோபிநாத், நவீன்குமார், எஸ். ஸ்ரீனிவாசன் ஆகியோர் அவரவர் பங்கேற்ற போட்டிகளில் தேர்வு பெற்றனர். டேக்வாண்டோ போட்டியில் கவிதாஸ், நிரஞ்ஜன், ரிஷி ரெனால்ட், ரமேஷ், பிரபு,ராஜன் ஆகியோர் அவரவர் பங்கேற்ற போட்டிகளில் தேர்வு பெற்றனர்.போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே ரூ.350,ரூ.250 மற்றும் ரூ.150 என மொத்தம் ரூ. 2.56 லட்சம் வீரர்,வீராங்கனைகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மண்டல முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்தினமாலா பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில்,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா, தடகளப் பயிற்றுநர் க. கோகிலா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai