சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி துண்டறிக்கை விநியோகம்

    By DIN  |   Published on : 09th January 2017 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி, பெரம்பலூரில் புதிய பயணம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரங்களை ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்தனர்.
    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அன்னமங்கலம், டி.களத்தூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தடையால் கடந்த 5 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. இந்நிலையில், நிகழாண்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்க கோரி, புதிய பயணம் அமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை பகுதியில் இருந்து காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை, புறநகர் பேருந்து நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில்,இந்தியன் செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலர் என். ஜெயராமன்,ஜல்லிக்கட்டு வீரர் விசுவக்குடி கிராமத்தை சேர்ந்த அபிசேட், புதிய பயணம் அமைப்பினர் ராகவன், ராஜீவ்காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.   

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai