சுடச்சுட

  

  நாளை மாவட்ட அளவிலான உலக திறனாய்வு விளையாட்டு போட்டிகள்

  By DIN  |   Published on : 09th January 2017 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  மாவட்ட அளவிலான உலக திறனாய்வு விளையாட்டு போட்டிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 10) நடைபெற உள்ளது என்றார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவில் 6, 7, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளிடையே விளையாட்டுத் திறனைக் கண்டறியும் வகையிலான மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வு விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே மாதிரி உலகத் திறனாய்வு விளையாட்டுப் போட்டிகள் நடத்திய பள்ளிகளின் மாணவ,மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
  இதில், 6, 7, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படும். 6 ஆம் வகுப்பு மாணவர்கள் 1.1.2004-க்கு பிறகும், 7 ஆம் வகுப்பு மாணவர்கள் 1.1.2003-க்கு பிறகும், 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 1.1.2002-க்கு பிறகும் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.  போட்டிகளில் பங்கேற்போர்  பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் வயதுச் சான்றிதழை கொண்டுவர வேண்டும். போட்டியில் முதல் 2 இடங்களைப் பெறுவோர், மண்டல விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.  பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ.80, ரூ. 60-ம் மற்றும் ரூ. 40-ம் பரிசாக வழங்கப்படும். முதல் 10 இடங்களுக்குள் வருபவர்கள் சிறப்பு பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர். ஒவ்வொரு மாணவரும் தலா 3 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம். மாணவ,மாணவிகள் விளையாட்டுச் சீருடையில் வரவேண்டும்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai