சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள தமிழக அரசின் இலவச சைக்கிள்கள்,பள்ளிகளின் வளாகங்களில் எவ்விதப் பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால் சேதமடைந்து வருகின்றன.
  தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை இலவசமாக வழங்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் மொத்தம் 39 பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 1 பயிலும் 5,649 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
  நிகழாண்டில் சைக்கிள்களுக்கான உதிரிப் பாகங்கள் மாவட்டம் தோறும் அனுப்பி வைக்கப்பட்டு, அவைகளை சைக்கிள்களாக மாற்றும் பணி சில நாள்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு மற்றும் இதர பிரிவைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 2,688 மாணவர்கள், 2,961 மாணவிகளும் அடங்குவர்.  இந்நிலையில், இந்த சைக்கிள்கள், பள்ளிகளில் உள்ள காலியிடங்கள் அல்லது விளையாட்டுத் திடல்களில் திறந்த வெளியில் நிறுத்தி இருப்பதால் சைக்கிள்கள் சேதமடைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஒருசில பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள சைக்கிள்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோரும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai