Enable Javscript for better performance
பெரம்பலூரில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 10) நடைபெறுகிறது என்றார் செயற்பொறியாளர் சி. தேவராஜ்.
    இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர்கள் முன்னிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (தமிழ்நாடு மின்சார வாரியம்) பெரம்பலூர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.  
    இந்தக் கூட்டத்தில், பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து பயன் பெறலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai