சுடச்சுட

    

    பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில், வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    பெரம்பலூர் மரகதவள்ளி தாயார் சமேத மதனகோபலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சனிக்கிழமை காலை 10 மணியளவில் மூலவர் உற்வச மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு 7 மணியளவில் நாச்சியார் திருக்கோலம், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
    தொடர்ந்து,ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருமாள் ஊஞ்சல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற வெள்ளி கருட சேவை திருவீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai