சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் 3.13 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது.
  பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் நியாய விலைக்கடையில் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணியை, பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதேபோல், குன்னம் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழச்சியில் குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன்,பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கும் பணிகளைத் தொடக்கி வைத்தார்.
  பெரம்பலூர் வட்டத்தில் 40,437 வேட்டிகளும், 40,232 சேலைகளும், வேப்பந்தட்டை வட்டத்தில் 41,540 வேட்டிகளும், 41,695 சேலைகளும், குன்னம் வட்டத்தில் 45,577 வேட்டிகளும், 44,651 சேலைகளும், ஆலத்தூர் வட்டத்தில் 29,627 வேட்டிகளும், 29,904 சேலைகளும் என மொத்தம் 3,13,663 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன.
  நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ரா. பேபி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மோகன், கூட்டுறவுத் துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணசாமி, வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், தமிழரசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலர் எம்.என். ராஜாராம், பாசறை மாவட்ட செயலர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai