Enable Javscript for better performance
ஓய்வுபெற்ற அலுவலர் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவர் அங்கமுத்து தலைமையில் அண்மையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மாவட்ட செயலர் மருதமுத்து மாத அறிக்கையும், மாவட்ட பொருளாளர் ஆதிசிவம் வரவு, செலவு அறிக்கையும் வாசித்தனர். கூட்டத்தில், சங்க வளர்ச்சி, செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட நிர்வாகிகள் சிவலிங்கம், நாராயணசாமி, வட்டார நிர்வாகிகள் செங்கான், சையத் பாட்ஷாஜான், செல்லப்பரெட்டி, கெம்பிராஜ், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலைமை நிலைய செயலர் பரமசிவம் வரவேற்றார். மாவட்ட இணை செயலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai