சுடச்சுட

    

    தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 10th January 2017 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொருளாளர் அ. கலையரசன், மாவட்ட துணை செயலர் ந. கிருஷ்ணகுமார், மாவட்ட அமைப்பாளர்கள் அய்யாக்கண்ணு, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை, வறட்சியால் பாதிக்கப்பட்ட முதன்மை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து வகையான விவசாய நிலங்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். விவசாயம் சார்ந்து கூலிவேலை செய்துவரும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் ஜீவனத்தொகை வழங்க வேண்டும். அனைத்து வகையான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை பலாத்காரம் செய்த நபர்களை வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட
    கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.மண்டல அமைப்பு செயலர்கள் இரா. கிட்டு, சு. திருமாறன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பேரா. முருகையன், கராத்தே பெ. பெரியசாமி, இரா. சீனிவாசன், சா. மன்னர் மன்னன், தமிழ்கனல், அ.க. தமிழ்குமரன், அ.க. தமிழாதன், ம.க.ச. ரத்தினவேல், வெ. செல்வமணி, இரா. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai