சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு வழங்கும் நிதியுதவியின் கீழ் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
  இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு தமிழக அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நிதியுதவி பெறுவதற்கு கிறிஸ்தவ தேவலாயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடமும், தேவாலயமும் பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருக்க கூடாது. சீரமைப்புப் பணிக்காக ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாயலத்திற்கு, மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பிறகே வழங்கப்படும்.
  விண்ணப்பப் படிவத்தை பிற்சேர்க்கையில் உள்ளவாறு, சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சிருக்கு ஜன. 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் w‌w‌w.bc‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
  மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதி அடிப்படையில் தேர்வுசெய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதியுதவி கோரி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai