சுடச்சுட

    

    நியாயவிலைக் கடை திறக்கக் கோரி திருமாந்துறை அருகே மறியல்: 62 பேர் கைது

    By DIN  |   Published on : 10th January 2017 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை அருகே பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 62 பேரை மங்கலமேடு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
    திருமாந்துறை அருகேயுள்ள நோவா நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள குடும்ப அட்டைதாரர்கள், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரனூர் கிராமத்துக்கு சென்று, அங்குள்ள நியாயவிலைக் கடையில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி வருகின்றனர்.
    மேலும், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது, விபத்து ஏற்பட்டு வருவதால் நோவா நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை தொடங்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனராம். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி பிரமுகர்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இந்தநிலையில், நோவா நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, லப்பைக்குடிகாடு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினரும், மங்கலமேடு போலீஸாரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் 62 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.  இதேபோல் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கடந்த நவ. 8 ஆம் தேதியிலிருந்து முறையாக பண பரிவர்த்தனை நடைபெறவில்லையாம். வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்தபட்ச தொகையே வழங்கப்பட்டு வருகிறதாம்.  திங்கள்கிழமை வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்களுக்கு அரசு அறிவித்த தொகையை வங்கி அலுவலர்கள் வழங்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai