சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.  
  மாவட்ட பொது செயலர்கள் பாஸ்கரன், அடைக்கலராஜ், இளங்கோவன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கோட்ட பொறுப்பாளர் எம். சிவசுப்ரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் சி. சந்திரசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கட்சியின் செயல்பாடு, உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினர்.
  கூட்டத்தில், புதிய மற்றும் பழைய உறுப்பினர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக உறுப்பினர் அட்டை வழங்குவதற்கு பொறுப்பாளர்களை நியமிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நகரத் தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai