Enable Javscript for better performance
பெரம்பலூரில் அரசு ஊழியர்கள், இளைஞர்களுக்கு இறகுப்பந்து போட்டி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் அரசு ஊழியர்கள், இளைஞர்களுக்கு இறகுப்பந்து போட்டி

    By DIN  |   Published on : 10th January 2017 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், அரசு அலுவலர்கள், இளையோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இறகுப்பந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இப்போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ம. ராமசுப்பிரமணிய ராஜா தொடக்கி வைத்தார்.வருவாய்த் துறையினர், வளர்ச்சித் துறையினர், மருத்துவர்கள், இளைஞர்கள், வங்கி ஊழியர்கள் உள்பட 14 அணிகள் போட்டிகளில் பங்கேற்றனர். எம்.என்.ரைடர்ஸ் அணியில் விளையாடிய மருத்துவர் நேரு, மாணவர் துரைமணி அணியினர் முதல் இடத்தையும், கல்மரம் அணியில் விளையாடிய ஸ்ரீதர், ஸ்டாலின் அணியினர் 2 ஆம் இடத்தையும், ஜல்லிக்கட்டு அணியில் விளையாடிய மதுபாலன், வினோத் அணியினர் 3 ஆம் இடத்தையும் வென்றனர்.
    இப்போட்டிகளை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முத்து சிலுப்பன் ஒருங்கிணைத்து நடத்தினார். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்
    சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட செயலர் பாரதிவளவன், மத்திய செயற்குழு உறுப்பினர் குமரிஆனந்தன் ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கினர். போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai