சுடச்சுட

  

  ஆதார் எண் பதியாதவர்களுக்கு குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம்?

  By DIN  |   Published on : 11th January 2017 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆதார் எண்களை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளதோடு, பெயர்களையும் நீக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
  பெரம்பலூர் மாவட்டத்தில் 95% ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.  இருப்பினும், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை, பெரம்பலூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும்பாலான நாள்களில் இணையதளம் செயல்படாததால்,பெண்களும்,முதியோரும் புகைப்படம் எடுக்க இயலாமல் திரும்ப நேரிடுகிறது.
  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருள்களின் விவரங்கள் குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. இதற்காக, அனைத்து கிராம அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களைப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
  பொருள்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் எண்களை உடனடியாக பதிய கடை ஊழியர்கள் கூறுவதுடன்,பொருள்களையும் வழங்க மறுக்கின்றனராம். அவ்வாறு, ஆதார் எண்ணை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களின் பெயரை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடும்ப அட்டைகளில் பெயரை நீக்கம் செய்வதோடு,அத்தியாவசிய பொருள்களின் எடையையும் குறைத்து வழங்குகின்றனராம்.  
  இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் பதிவு மையத்துக்கு சென்றால், அங்குள்ள பணியாளர் பொதுமக்களின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும், பழைய
  பேருந்து நிலையப் பகுதியில் உள்ள தனியார் கணினி மையத்துக்கு செல்லுமாறு அனுப்புகிறாராம். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாகும்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai