சுடச்சுட

  

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
  விழாவுக்கு தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்து பார்வையிட்டார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன்.  
  இதில்,தமிழர் பண்பாட்டு முறைப்படி பூஜை நடத்தப்பட்டு, கால்நடைகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோலாட்டம், காவடி, கபடி, தப்பாட்டம், உரி அடித்தல், இசை நாற்காலி, கும்மியடித்தல், சிலம்பாட்டம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  பின்னர், சிறந்த முறையில் பொங்கல் வைத்த மாணவிகளுக்கும், திறமையை வெளிப்படுத்திய தப்பாட்ட மாணவர்களுக்கும், சிறப்பான அரங்கு அமைத்தவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார் தாளாளர் சீனிவாசன். இவ்விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் ராஜலட்சுமி, சாந்தகுமாரி, பாஸ்கர், செவிலியர் கல்லூரி முதல்வர் ராசாத்தி, இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நா. வெற்றிவேலன், துணை முதல்வர் ஜி. ரவி, மெட்ரிக் பள்ளி முதல்வர் மரியபுஷ்ப தீபா உள்பட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் ஆர். கோவிந்தசாமி நன்றி கூறினார்.   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai