சுடச்சுட

    

    பெரம்பலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 11th January 2017 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தக் கோரி, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளைத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். கிளைச் செயலர் ராஜமாணிக்கம், சிஐடியூ பொறுப்பாளர் சிங்கராயர், ஏஐடியூசி கிளை தலைவர் என். ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தொமுச மாவட்டத் தலைவர் சித்ரவேல், துணைத் தலைவர் ரவிசந்திரன், குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 1.9.2016-ல் நடத்த வேண்டிய 13 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். 8 மாதமாக நிலுவையில் உள்ள அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும்.
    ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
    இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் விஜயகுமார், இளங்கோவன், தியாகராஜன், சங்கர், பழனிவேல், தனபால், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai