Enable Javscript for better performance
பெரம்பலூரில் மின்சாரம் பாய்ந்து வங்கி ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் தவறி விழுந்த வங்கி ஊழியர் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
    பெரம்பலூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பழனிமுத்து மகன் திருஞானமூர்த்தி (50). இவர், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பெரம்பலூர் - விளாமுத்தூர் சாலையில் உள்ள அவரது வயலுக்கு சென்றவர், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், வயலுக்கு சென்று பார்த்தபோது, எலிகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் தவறி விழுந்து, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, திருஞானமூர்த்தியின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
    பக்கெட் தண்ணீரில் முழ்கி குழந்தை சாவு:  பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகள் மோனிஷா (2). இந்தக் குழந்தை, திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்ததாம். சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து அவரது தாய் செல்வி வெளியே வந்து பார்த்தபோது மோனிஷாவை காணவில்லையாம். பின்னர்,அங்கிருந்த பக்கெட்டை பார்த்தபோது அதிலிருந்த தண்ணீரில் மூழ்கிக் கிடந்தது தெரியவந்தது. சிகிச்சைக்காக, குழந்தை மோனிஷாவை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையைப் பகிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத் திணறலால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai