சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் புகை மாசில்லா போகிப் பண்டிகை கொண்டாட மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

  இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில், வீட்டில் உள்ள பழைய தேவையற்ற மற்றும் செயற்கை பொருள்களான டயர்கள், பிளாஸ்டிக் இதர பொருள்களை எரிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இதுபோன்ற பொருள்களை எரிப்பதால் நச்சுப் புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத் துகள்களால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுவதோடு, பார்வை திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இதுபோன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.எனவே, போகியன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகித் திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், சுற்றுச்சூழலையும், மக்களின் உடல் நலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai