சுடச்சுட

    

    மத்திய அரசு பொங்கல் பண்டிகையொட்டி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி எதிரே,தமிழர்களின் பாராம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்: பெரம்பலூர் புறநகரான துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசாணைப் படி பொங்கலுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென வவியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு,சங்க மாவட்டத் தலைவர் முத்து தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலர் மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மாவட்டச் செயலர் சுப்ரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் மகாதேவன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார், மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai