சுடச்சுட

  

  தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஜன. 20-ல் ஓவியம், வினாடி- வினா போட்டி

  By DIN  |   Published on : 13th January 2017 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, ஜன. 20 ஆம் தேதி ஓவியம், வினாடி- வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் மு. வேலு.
  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர் கூட்ட அரங்கில்,  அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் மேலும் பேசியது:
  ஜன. 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுவதை முன்னிட்டு,மாவட்ட அளவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முதல்முறையாக வாக்களிக்க உள்ள 18 வயது பூர்த்தியடைந்த இளம்வாக்காளர்கள்,ஜனநாயகத்தின் மீதும்,மக்களாட்சித் தத்துவமான "மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி' என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொருவரும் ஜனநாயக கடமை ஆற்றிடும் வகையில்,வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களிடையே "நான் எதிர்கால இந்தியாவின் வாக்காளர், வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம்' என்ற தலைப்பில் பேச்சு, ஓவியம்,தேர்தல் வினாடி - வினா போட்டி மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற உள்ளது.
  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக்தில் ஜன. 20 ஆம் தேதி நடைபெறும் இப்போட்டிகளில், அனைத்து கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் அதிகளவில் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியத்தையும், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
  கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச. மாரிமுத்து,மாவட்ட வழங்கல் அலுவலர் ப. கள்ளபிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai