சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில், அணிலாடு முன்றில் என்னும் தலைப்பில் இலக்கியப் பேரவை கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு,கல்லூரி முதல்வர் முனைவர் ந. ராசாராமன் தலைமை வகித்தார்.
  சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் ஆ. கார்த்திகேயன், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் உ. அலிபாவா ஆகியோர் முறையே மொழி கற்றலும் - கற்பித்தலும்,கவிதை இலக்கியம் எனும் தலைப்புகளில்  சொற்பொழிவாற்றினார்.  
  விழாவையொட்டி நடத்தப்பட்ட கலை,இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
  இதில்,துறைத் தலைவர்கள்,பேராசிரியர்கள்,இளநிலை மற்றும் முதுநிலை தமிழ்த் துறையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  
  தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் நா. ஜானகிராமன் வரவேற்றார். தமிழ்த் துறை உதவி பேராசியர் முனைவர் மூ. பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai