சுடச்சுட

  

  பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
  நகரச் செயலர் எம். பிரபாகரன், ஒன்றியச் செயலர்கள் அண்ணாதுரை, கிருஷ்ணமூர்த்தி, மதியழகன், நல்லதம்பி, ராஜேந்திரன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
  மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தொடர்ந்து, தமிழ்ப் புத்தாண்டை சிறப்பாக கொண்டுவது, வாக்காளர் பட்டில் சரிபார்த்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  கூட்டத்தில், மார்ச் 1 ஆம் தேதி நம்பிக்கை திருவிழாவாக கொண்டாடுவது. பெரம்பலூரில் ஜன. 20 ஆம் தேதி புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  இக்கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மா. ராஜ்குமார், பா. துரைசாமி, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி. முகுந்தன், வழக்குரைஞர் என். ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai