சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதிக்கொண்டதில் 20 பக்தர்கள் காயமடைந்தனர்.
    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நஞ்சலை குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட ஓம்சக்தி பக்தர்கள் கொண்ட பேருந்து,பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை வந்தபோது,சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கடந்து செல்ல முயன்றது. அப்போது, எதிரே நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, அரசுப் பேருந்து மீது மோதியது.
    இதில்,பக்தர்கள் பேருந்தில் பயணம் செய்த நஞ்சலைகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் காயமடைந்தனர்.  தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில்,முத்துலட்சுமி,சம்பூர்ணம்,கோவிந்தம்மாள், ராஜேந்திரன் ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai