சுடச்சுட

  

  பெரம்பலூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நபர் ஒன்றுக்கு ரூ. 1,000 மட்டுமே வழங்கியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
  பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் பயிர்க் கடன்களுக்கான தொகை விவசாயிகளுக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. வங்கியில்,போதிய அளவு தொகை இல்லாததால் விவசாயிகளுக்கு தலா ரூ. 1,000 மட்டுமே வழங்கப்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வங்கி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai