Enable Javscript for better performance
அரியலூரில் நிவாரணம் கோரி விவசாயிகள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி, அரியலூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏக்கர் நெல்லுக்கு ரூ.30 ஆயிரமும், வாழைக்கு ரூ.1 லட்சமும், அனைத்து மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.
    மேலும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு அடுத்த விவசாய பணிகள் தொடரும் வரை ஒவ்வொரு குடும்ப அடைக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தில்,வறட்சியால் விவசாயிகள் தற்கொலை மற்றும் உயிரிழந்து வருவதை குறிக்கும் வகையில் கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொண்டும், கையில் திருவோடு, மற்றொரு கையில் விஷ மருந்து பாட்டில்கள் ஏந்தியவாறு புறவழிச்சாலையில் இருந்து மாவட்ட ஆட்சியரக அலுவலகம் வரை விவசாயிகள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார்.
    மக்கள் சேவை இயக்க அகில இந்திய தலைவர் தங்க. சண்முகசுந்தரம், செயலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பஞ்சநாத கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai