சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே முறையாக வராததால், தனியார் பேருந்தை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஜயங்கொண்டத்தில் இருந்து காட்டுமன்னார்குடிக்கு எரவாங்குடி வழியாக இரு தனியார் பேருந்துகளும், இரண்டு அரசு நகரப் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இரவு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயணிகள் இருக்கும்போது மட்டும் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் காட்டுமன்னார்குடியிலிருந்து ஜயங்கொண்டம் நோக்கி வரும் தனியார் பேருந்து இரவுநேரத்தில் வருவதில்லை என கூறி, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு எரவாங்குடியில் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மீணடும் பேருந்துகள் இயக்கபடும் என ஓட்டுநர், நடத்துநர்  கூறியதன் பேரில் போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.இதனால் காட்டுமன்னார்குடி- ஜயங்கொண்டம் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai