Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முகவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செய்தித்தாள் விநியோகம் செய்யும் முகவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
    ஆலத்தூர் வட்டம், காரை ஊராட்சிக்குள்பட்ட புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் துரை (27). இவர், ஆலத்தூர் கேட் பகுதியில் செய்தித்தாள் முகவராக இருந்து வந்தார்.இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை செய்தித்தாள்களை வீடுகளில் விநியோகம் செய்துவிட்டு, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் அருகேயுள்ள பெருமாள் மலையடிவாரத்தில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai