சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள  காகன்னை ஈஸ்வரர் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு, கரும்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
  விழாவையொட்டி, மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், அன்னை சித்தர் எஸ். ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பிரம்மரிஷி மலையில் மகர தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோ-பூஜை மற்றும் பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், 210 சாதுகளுக்கு கரும்பு, பணம், வஸ்திர தானமும், ஏழை, எளிய மக்களுக்கு கரும்பும், அன்னதானமும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், எளம்பலூர், எம்.ஜி.ஆர் நகர், வடக்குமாதவி, இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, மகா சித்தர்கள் அறக்கட்டளை இயக்குநர்கள் ரா. ரோகினி, ரா. சுந்தரமகாலிங்கம், ரா. தவசிநாதன் மற்றும் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai