சுடச்சுட

    

    "செல்லிடப்பேசி, தொலைக்காட்சியை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்'

    By DIN  |   Published on : 16th January 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் செல்லிடப்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றார் வருவாய்க் கோட்டாட்சியர் இரா. பேபி.
    பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் பேசியது:  
    நமது தாயையும், தாய் நாட்டையும் மாணவர்கள் போற்றி பாதுகாக்க வேண்டும். நம்முடைய விருப்பத்தை மட்டுமே நாம் நிறைவேற்ற வேண்டும். கல்வி என்பது தோண்டி எடுப்பது போல, அதை மாணவர்கள் தங்களது திறமைகளைகொண்டு கண்டறிதல் வேண்டும்.பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு சுதந்திரமும், உரிமையும் அளிக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி தாய் நாட்டை நேசிக்கவும் கற்றுத்தர வேண்டும். மாணவர்கள் கல்வி பயிலும் போது செல்லிடப்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.  தொடர்ந்து, பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட  அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, வினாடி- வினா ஆகியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், கல்வியில் சிறந்து விளங்கிய 75 மாணவர்களுக்கும் பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கினார் கோட்டாட்சியர் பேபி. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் தலைமையில், செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai