Enable Javscript for better performance
நிலுவைத் தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நிலுவைத் தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 16th January 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகளுக்கு கரும்பு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, எறையூர் சர்க்கரை எதிரே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
    பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சர்க்கரை ஆலைக்கு 2015- 2016ஆம் ஆண்டுக்கான அரவை பருவத்துக்கு சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கான தொகை ரூ. 20.49 கோடியை ஆலை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை.
    இத்தொகையை வழங்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    எனினும், ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    இதையடுத்து, கரும்புக்கான நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்கக் கோரி, பொங்கல் பண்டிகையை கருப்பு பொங்கல் பண்டிகையாக அனுசரிக்கவும், விவசாயிகள் ஈடுபடும் போராட்டங்களுக்கு தமிழக அரசும், ஆலை நிர்வாகமும் செவி சாய்க்கவில்லை என்பதை விளக்கும் வகையில், பொங்கல் தினத்தன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்திருந்தது.
    அதன்படி, மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் சனிக்கிழமை  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கரும்பு விவசாயிகளும், சங்க நிர்வாகிகளும் கண் மற்றும் காதுகளை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பெரும்பாலான கரும்பு விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai