சுடச்சுட

  

  பெரம்பலூரில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா

  By DIN  |   Published on : 16th January 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு, அக்கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், அனைத்துத் துறைகளின் மாணவிகள் சார்பில் பொங்கலிட்டு பூஜை செய்யப்பட்டது.
  தொடர்ந்து, குதிரை நடனம், கும்மி ஆட்டம், பானை உடைத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  பின்னர், சிறந்த முறையில் பொங்கல் மற்றும் கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் எஸ்.எச். அப்ரோஸ், துணை முதல்வர் பவித்ரா மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
  ரோவர் கல்லூரி: பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி மற்றும் ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு அக் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் கி. வரதராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி. ஜான் அசோக், அறங்காவலர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவையொட்டி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கயிறு இழுத்தல், இசை நாற்காலி, நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.    இதில், கல்லூரி முதல்வர்கள் வெ. அயோத்தி, ஏ. அல்லிராணி, பி. கணேஷ்பாபு, ஏ. சுப்பாராஜ், அமல்தாஸ், கல்லூரி துணை முதல்வர் மகேந்திரன், மேலாளர்கள் சீனிவாசன், ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
       கோல்டன் கேட்ஸ் பள்ளி :   பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தாளாளர் ஆர். ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அங்கயற்கண்ணி முன்னிலை வகித்தார். கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, கோல்டன் கேட்ஸ் சி.பி.எஸ்.சி பள்ளி சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai