சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் மாட்டுப் பொங்கல் விமரிசையாகக் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாத முதல் நாளான சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 3ஆம் நாள் நிகழ்ச்சியாக மாட்டுப் பொங்கலை விவசாயிகள் உற்சாகமாகக் கொண்டாடினர். விவசாயிகள் தங்களது வாழ்வின் அங்கமான விவசாயத்துக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கால்நடைகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வர்ணங்கள் பூசி புதிய மூக்கணாங்கயிறு, தலைக்கயிறு மாடுகளுக்கு கட்டினர்.மேலும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு மாலைகள் அணிவித்து, பொங்கலிட்டு தீபம் ஏற்றி வணங்கி வழிபட்டு அவற்றுக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர், கால்நடைகளுக்கு பொங்கல் வழங்கியும், தாங்களும் உண்டு மகிழ்ந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai