Enable Javscript for better performance
கறவை மாடு வளர்க்க இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகேயுள்ள கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளர்க்க  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் பிரிவுச் சாலையில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இந்த ஒரு நாள் பயிற்சி ஜன. 19-ல் அளிக்கப்பட உள்ளது. இதில் கறவை மாடு வளர்ப்பு, இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைப்பு, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    இதில் பங்கேற்க விரும்புவோர்    கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பெயரைப் பதிய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328- 291459.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai