சுடச்சுட

    

    கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலய உண்டு உறைவிட மையத்தை நடத்தலாம்

    By DIN  |   Published on : 17th January 2017 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலய உண்டு உறைவிட மையத்தை ஏற்று நடத்துவதற்கு தகுதி வாய்ந்த, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரும், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான க. முனுசாமி.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    அனைவருக்கும் கல்வி இயக்கம் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், கருசேனாபதியில் செயல்படும் இந்த மையத்தை ஏற்று நடத்தும் தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றிருப்பதோடு, கூட்டுறவு அல்லது அறக்கட்டளை சட்டத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். வருமான வரி கணக்கு எண்,  80 ஏ மற்றும் 12 ஏ பெற்றிருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு வருமான வரி தாக்கல் செய்தமைக்கான விவரத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
    கடந்த காலங்களில தங்களது நிறுவனம் மூலம் நடத்திய செயல்பாடுகளுக்கு தணிக்கைத் தடைகள் ஏதுமின்றி முடித்திருக்க வேண்டும். குழந்தைகள், பெண் குழந்தைகள் பராமரிப்பு சார்ந்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உண்டு உறைவிட மையம் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத் தகுதிகளையுடைய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன. 27 மாலை 5.30-க்குள், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரம்பலூர் அலுவலகத்திற்கு வந்து சேரும் வகையில் நேரடியாக அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai