சுடச்சுட

    

    பொங்கல் விழாவின் இறுதி நாளான திங்கள்கிழமை காணும் பொங்கலை, பெரம்பலூர்  மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா, பொழுது போக்கும் பகுதிகளில் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
    பெரம்பலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்கா, விசுவக்குடி நீர்த்தேக்கம், சாத்தனூர் கல்மர கல்மரப் பூங்கா, ரஞ்சன்குடி கோட்டை, வெள்ளாற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே தங்களது குடும்பத்தினர், உறவினருடனும் கூடினர்.
    ஆட்சியரக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் பெரியவர்கள், சிறியவர்கள் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். பெரம்பலூர் நகர்ப்புறம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் கோலப் போட்டிகள், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai