சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த மற்றொரு விவசாயியை, பெரம்பலூர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
    பெரம்பலூர் அருகேயுள்ள களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவஞானம் (47), விவசாயி. திருச்சி மாவட்டம், பச்சமலை அருகேயுள்ள மணலோடை பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் ரவி (45), விவசாயி. இவர் தற்போது களரம்பட்டி கிராமத்தில் சிவஞானம் வீட்டருகே வசித்து வருகிறார்.
    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ரவி வீட்டின் அருகே, சிவஞானம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சென்றாராம். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரவி, துப்பாக்கியை காட்டி மிரட்டி, சிவஞானத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.  புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ரவியை கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai