சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகவும், ஜயங்கொண்டத்தில் அனல் மின் திட்டங்களுக்காகவும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நிலங்களை ஒப்படைக்க வேண்டுமென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
  பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் சிற்றம்பலம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.  மாவட்டச் செயலர் ஆர். மணிவேல் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னதுரை சிறப்புரையாற்றினார்.
  கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 3.800 ஏக்கர் விவசாய நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் அனல் மின் நிலைய திட்டம் தொடங்குவதற்காக விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
  தவறும்பட்சத்தில் அனைத்து விவசாயிகளையும், பொதுமக்களையும், ஒன்றிணைத்து கட்சி சார்பில் மார்ச் மாதத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது. பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக ஆய்வு செய்து, வறட்சி மாவட்டமாக அறிவிப்பதோடு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். அழகர்சாமி, என். செல்லதுரை, பி. துரைசாமி, எ. கலையரசி, பி. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai