சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தடையை மீறி பூலாம்பாடி, தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடம்பூர், கள்ளப்பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற இருந்த போட்டிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
  வேப்பந்தட்டை வட்டத்திற்குள்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடைபெறும்.
  நிகழாண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியில்லாத நிலையில், திங்கள்கிழமை காலை பூலாம்பாடி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
  தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றதால் மாடுபிடி வீரர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
  இதேபோல, தொண்டமாந்துறை கிராமத்தில் பெருமாள் கோயில் எதிரே 10-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டனர்.  ஏராளமான இளைஞர்கள் காளைகளை அடக்க முயற்சித்தனர்.
  இதேபோல, கடம்பூர், கள்ளப்பட்டி ஆகிய கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் அப்பகுதிக்கு சென்று காளைகளை அப்புறப்படுத்துமாறு எச்சரித்து, ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தினர்.
   இதனால், போலீஸாருக்கும், மாடுபிடி வீரர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர், போலீஸார் எச்சரித்ததைத் தொடர்ந்து, இளைஞர்கள் கலைந்து சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai