சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின்கீழ், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். 31.12.2016-ல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 45 வயதைக் கடந்தவராகவும், இதர வகுப்பினர் 40 வயதைக் கடந்தவராகவும், அரசால் வழங்கப்படும் பிற உதவித்திட்டங்கள் ஏதும் பெறுபவராகவும், எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருக்கக் கூடாது.  மேற்கண்ட தகுதியுடையோர் அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும்  மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்களது பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன், விண்ணப்பத்தை பிப். 28ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து உதவித்தொகை பெறலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai