சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட அதிமுக மற்றும் தீபா பேரவை, மதிமுக சார்பில், எம்ஜிஆர் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு, மாவட்ட அதிமுக சார்பில் மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர்
  முன்னிலையில், மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர், கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
  தீபா பேரவை: தீபா பேரவை சார்பில், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து பேரணியாக சென்று, புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  பின்னர், ஜே. தீபா அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர். அதிமுக பொறுப்பாளர்களும், பேரவை ஒருங்கிணைப்பாளர்களுமான பிச்சை, மணிசேகரன், புகழேந்தி, தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   
  தொடர்ந்து, குரும்பலூர், ரெங்கநாதபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கும், அவரது உருவபடத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  இதேபோல, மதிமுக சார்பில் எம்ஜிஆர் உருவ சிலைக்கு, அதன் மாவட்ட செயலர் எஸ். துரைராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai