Enable Javscript for better performance
சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் வரத்து வாய்க்கால்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
    பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் எஸ்.சி அணி மாவட்ட செயற்குழு மற்றும் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், மாவட்டத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
    மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன், மாவட்ட பொதுச் செயலர்கள் இளங்கோவன், அடைக்கலராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எஸ்.சி அணி மாநில தலைவர் வெங்கடேசன் பேசினார்.
    கூட்டத்தில், கருப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிப்புக்காக நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்திற்கு வித்திட்ட பிரதமர் மோடியை பாராட்டுவது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விடுதிகளை கட்டித்தரும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு, தனி மாவட்ட கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும்.  
    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு கட்டுப்பாட்டிலுள்ள தரிசு நிலம், ஏரி, குளம், குட்டை, நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் போதிய மழையில்லாத காரணத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை, நிவாரணத் தொகைகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எஸ்.சி, எஸ்.டி கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    பொதுச் செயலர் செல்வராஜ், மாநில பொருளாளர் பிரசாத், திருச்சி கோட்ட பொறுப்பாளர் இந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஸ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai