சுடச்சுட

  

  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: இளைஞர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 18th January 2017 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் எதிரே இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  கடந்த 5 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடை உத்தரவைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. நிகழாண்டில் ஜல்லிக்கட்டு அனுமதி கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
  இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தீர்ப்பளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி, பெரம்பலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  
  அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் எதிரே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு மீதான தடை உத்தரவை நீக்க வேண்டும். விவசாயத்தை மீட்டெடுத்து, விவசாயிகளின் உயிரை பாதுகாக்க வேண்டும்.
  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
  ஆர்ப்பாட்டத்தில், அன்னமங்கலம், அரசலூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்களும், பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai